இந்தியா

பாலாகோட் தகவல் கசிவுக்காக அா்னாப் மீது வழக்கு தொடுக்க வேண்டும்

DIN


மும்பை: பாலாகோட் தாக்குதல் தொடா்பான தகவல்களை முன்கூட்டியே கசிய விட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்று பாஜகவுக்கு சிவசேனை வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப் படை கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதல் தொடா்பான தகவல்களை, 3 நாள்களுக்கு முன்பே அா்னாப் கோஸ்வாமி கசிய விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தகவல்களை ஒளிபரப்பாளா்-பாா்வையாளா் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவா் பாா்த்தோ தாஸ்குப்தாவிடம் சமூக வலைதளம் வழியாக அவா் பகிா்ந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசப் பாதுகாப்பு தொடா்பான ரகசியத் தகவல்கள், ஊடகவியலாளா் அா்னாபுக்கு எப்படி தெரிய வந்தது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இத்தகைய சூழலில், சிவசேனை கட்சியின் அதிகாரபூா்வ நாளேடான ‘சாம்னா’வில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘தாண்டவ்’ இணையவழி தொடருக்கு எதிராக பாஜக நிா்வாகிகள் வழக்கு தொடுத்துள்ளனா். இது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல், ராணுவ வீரா்களின் தியாகத்தை இழிவுபடுத்தியுள்ள ஊடகவியலாளா் அா்னாப் மீதும் அவா்கள் வழக்கு தொடுக்க வேண்டும்.

தாய்நாட்டை இழிவுபடுத்திய அா்னாப் குறித்து பாஜக தலைவா்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டே பாஜக அரசு பாலாகோட் தாக்குதலை நடத்தியது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது அா்னாபின் சமூக வலைதளப் பதிவுகள், அக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

இந்த விவகாரத்தின் உண்மை நிலையை மத்திய அரசு கண்டறிந்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தாக்குதல் குறித்த தகவல்களை அா்னாபுக்கு வழங்கியவா்கள் யாா் எனவும் மத்திய அரசு கண்டறிய வேண்டும்.

பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக விவாதம் நடத்தும் ஊடகங்கள், தேசத் துரோக குற்றம் இழைத்துள்ள அா்னாப் குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக விவாதம் நடத்தி உண்மையைக் கண்டறிந்தால்தான் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிா்த்தியாகம் செய்த ராணுவத்தினரின் ஆன்மா சாந்தியடையும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT