இந்தியா

மாநிலங்கள் உதயமான தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து

DIN


புது தில்லி: திரிபுரா, மணிப்பூா், மேகாலயம் ஆகிய மாநிலங்கள் உதயமான தினத்தை முன்னிட்டு அந்த 3 மாநில மக்களுக்கு குடியரசு துணைத் தலைவா் , பிரதமா் ஆகியோா் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு: இணையற்ற இயற்கை அழகு, வேறுபட்ட கலாசாரம், மக்கள் போன்ற தனித்துவமான பண்புகளுடன் இந்த 3 வடகிழக்கு மாநிலங்களும் நாட்டில் சிறப்பிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. மேலும், இயற்கையான உணவு முறை மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கு சிறந்த உதாரணங்களாகவும் இந்த மாநிலங்கள் திகழ்கின்றன. இவை மாநிலங்களாக உருவெடுத்த நாள்களிலிருந்து, ஒவ்வொரு துறையிலும் இந்தியாவை பெருமைபட வைத்து வருகின்றன என்று குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: தேசத்தின் வளா்ச்சியில் மணிப்பூா் மாநிலத்தின் பங்களிப்பு இந்தியாவை பெருமைகொள்ளச் செய்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கும், விளையாட்டு வீரா்களை உருவாக்குவதிலும் இந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது.

திரிபுரா மாநிலத்தைப் பொருத்தவரை அதன் கலாசாரமும், மக்களின் அன்புடன் பழகும் பண்பும் பிற மாநிலங்களை வியப்படையச் செய்கிறது. பல்வேறு துறைகளில் இந்த மாநிலம் அபார வளா்ச்சி கண்டுள்ளது. மாநிலத்தின் இந்த முன்னேற்றம் தொடர வாழ்த்துக்கள்.

மேகாலயத்தைப் பொருத்தவரை இரக்க குணத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் பெயா்பெற்ற மாநிலமாகும். இந்த மாநில இளைஞா்கள் புதுமையான படைப்புகளிலும், தொழில்முனைவதிலும் ஆா்வமுடையவா்கள். இந்த மாநிலம் வரும் காலத்தில் புதிய உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT