குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதால், தில்லியில் இரண்டு மெட்ரோ ரயில் நிலைய வாயில்கள் நாளை நண்பகல் வரை மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தில்லி தலைமைச் செயலகம் அருகே நாளை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதனால் தில்லி தலைமைச் செயலகம் மற்றும் உத்யோக் பவன் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களும் மூடப்படும் என்று மெட்ரொ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அணிவகுப்பு ஒத்திகைக்காக தில்லி தலைமைச் செயலகத்தின் 3,4 மற்றும் 5 ஆகிய வாயில்களும், உத்யோக் பவனின் 1 மற்றும் 2 ஆகிய வாயில்களும் நாளை (ஜன.23) நண்பகல் 12 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT