இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,779 பேருக்கு கரோனா

22nd Jan 2021 09:35 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,779 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,03,657ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 44,926 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 50 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,684ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,419 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,06,827ஆக உயர்ந்துள்ளது. 2,13,414 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT