இந்தியா

கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீரில் விதித்திருந்த தடை நீங்கியது

22nd Jan 2021 12:13 PM

ADVERTISEMENT

 

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி இறக்குமதிக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. 

கரோனாவுக்கு அடுத்தபடியாக பல மாநிலங்களிலும் சமீபமாகப் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகின்றது. இதையடுத்து பல்வேறு கோழிப் பண்ணைகளில் உள்ள பறவைகள் அழிக்கப்பட்டது. 

இதன் காரணமாக , ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கோழி இறக்குமதிக்கு அந்நாட்டு அரசு திடீரென தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில், 

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்படாத பகுதியிலிருந்து கொண்டுவரும் கோழி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்குத் தடை விதிக்கப்படாது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட கோழிப்பண்ணையிலிருந்து பறவைக் காய்ச்சல் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருப்பது அவசியம் என்றார். 

ஜம்மு-காஷ்மீரில் பறவைக் காய்ச்சல் இருப்பதாக இதுவரை எந்த அறிக்கையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : bird flu பறவைக் காய்ச்சல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT