இந்தியா

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,545 பேருக்கு தொற்று; 163 பேர் பலி

22nd Jan 2021 10:40 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1,88,688 -ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.81 சதவீதமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,06,25,428-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 18,002 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,02,83,708 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.75 சதவீதமாகும்.

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு மேலும் 163 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,032-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் 1,88,688 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 73 சதவீதம் போ், கேரளம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

புதிதாக ஏற்பட்ட 163 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 21-ஆம் தேதி வரை 19.01,48,024 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 8,00,242 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 10,43,534 சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : coronavirus COVID19 case India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT