தீ விபத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை உற்பத்தி செய்துவரும் சீரம் நிறுவனத்தின் ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 9 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.
தீ விபத்து ஏற்பட்ட சீரம் ஆலை வளாகத்தில் தடவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா, தீ விபத்தால் கோவிஷீல்டு உற்பத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகள் பாதுகாப்பாக உள்ளன. தீ விபத்து தடுப்பு மருந்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.