இந்தியா

கரோனா: சிகிச்சையில் 1.92 லட்சம் போ்

DIN


புது தில்லி: நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1,92,308-ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.81 சதவீதமாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,06,10,883-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,965 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,02,65,706-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.75

சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 151 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,56,869-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் 1,92,308 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 73 சதவீதம் போ், கேரளம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், கா்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

புதிதாக ஏற்பட்ட 151 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 59 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 18 பேரும், தில்லி, சத்தீஸ்கரில் தலா 10 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 20-ஆம் தேதி வரை 18.93 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 7,80,835 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள்: வியாழக்கிழமை மாலை 6 மணி வரை, நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியா்கள் 9,99,065 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT