இந்தியா

பிரியங்கா காந்தி புகைப்படங்களுடன் நாள்காட்டி தயாரிக்கும் காங்கிரஸ்

22nd Jan 2021 02:04 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி புகைப்படங்களுடன் கூடிய நாள்காட்டியை காங்கிரஸ் கட்சி வழங்கி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களை கவரும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டியை காங்கிரஸ் கட்சி தயாரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னெள, அமேதி, ரேபரேலி, வாரணாசி, உஜ்ஜெயின் ஆகிய பகுதிகளிலும் மற்றும் ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நாள்காட்டிகளை வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நாள்காட்டியின் முதல் பக்கத்தில் சோன்பத்ரா படுகொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ஹாத்ரஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டது, ஹாத்ரஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியது, சிஏஏ-க்கு எதிரான  போராட்டத்தில் சிறுமியின் கண்ணீரைத் துடைப்பது உள்ளிட்டது போன்ற பிரியங்கா காந்தியின் புகைப்படங்களுடன் நாள்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி மக்களை கவரும் வகையில் காங்கிரஸ் சார்பில் இந்த நாள்காட்டி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT