இந்தியா

மேகாலய சுரங்க விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி

22nd Jan 2021 08:14 PM

ADVERTISEMENT

மேகாலயத்தில் சுரங்கப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர்.

மேகாலயத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் வியாழக்கிழமை சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கம் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விபத்து குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சுரங்க உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Meghalaya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT