இந்தியா

ஒடிசாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

22nd Jan 2021 10:57 AM

ADVERTISEMENT


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜகத்சிங்பூர் மற்றும் பர்கர் மாவட்டங்களைச் சேர்ந்த அந்த இரு முன்களப் பணியாளர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா பணியாளர் கடந்த 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

ADVERTISEMENT

இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Tags : coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT