இந்தியா

தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பின் முதல்வர் பதவி குறித்து முடிவு: பாஜக

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக பிரசாரப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையிலும், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அவ்வபோது மேற்கு வங்கத்திற்கு வருகை புரிகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க்களையும் பாஜக தனது கட்சிப்பக்கம் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதனிடையே தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று  பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் நிலைநிறுத்தி பிரசாரம் நடைபெறாது. தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு கட்சித் தலைமை மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்து முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT