இந்தியா

மின்கசிவு காரணமாக சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: உத்தவ் தாக்கரே

DIN

மின்கசிவு காரணமாக சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வரும் சீரம் நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த 10 தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இதனிடையே சீரம் நிறுவனத்தின் தீ விபத்து முழுவதும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, இதுவரை 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்துகளுக்கு எந்தவித சேதமும் இல்லை. அவை பாதுகாப்பாக உள்ளன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT