இந்தியா

திரிபுரா: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்

DIN


திரிபுராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் மசோதாவிற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் கிஷோரி சுஜிதா அபியா என்ற திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாநில அரசு சார்பில் 3.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் பின் தங்கிய மாணவிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT