இந்தியா

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு: ஆணையத்தில் புகார்

DIN

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார்.

விடுதலையாக சில நாள்களே உள்ள நிலையில், அரசியலில் முக்கிய புள்ளியான சசிகலாவுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில்,  திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார்.

விடுதலையாக சில நாள்களே உள்ள நிலையில், அரசியலில் முக்கிய புள்ளியான சசிகலாவுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவை கேரளம் அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT