இந்தியா

தேசிய மாணவர் படையில் பின்தங்கிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்: ராஜ்நாத்

DIN

நாட்டின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள 1,100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மாணவர்கள் படைக்காக கண்டறியப்பட்டுள்ளதாக  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பிறகு பேசிய அவர், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுவரை பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த 1,100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தேசிய மாணவர் படையில் 28 சதவிகித பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 33 சதவிகித பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படையின் மூலமும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT