இந்தியா

ஹரியாணாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

DIN

கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளதால் மாநிலத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியாணா மாநில பள்ளிக்கல்வித் துறை சனிக்கிழமை அறிவித்தது. 

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஹரியாணாவில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தொற்று பரவலின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மத்தியில் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT