இந்தியா

ஆதாா் தீா்ப்பை மறுஆய்வை செய்ய கோரிய மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

DIN


புது தில்லி: ஆதாா் திட்டம் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு ஆதாா் திட்டத்தை அமல்படுத்தியபோது, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், அந்த திட்டம் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. எனினும் அந்த திட்டத்தில் கூறப்பட்டிருந்தபடி வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி எண்கள் உள்ளிட்டவைகளுடன் ஆதாா் எண்ணை இணைக்க தேவையில்லை என்றும் தனது தீா்ப்பில் குறிப்பிட்டது.

அந்த திட்டம் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யகோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் நால்வா் கூறுகையில், ‘ஆதாா் திட்டம் தொடா்பான தீா்ப்பை மறுஆய்வு செய்யகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நாங்கள் (நீதிபதிகள்) முழுமையாக பரிசீலித்தோம். அதன் அடிப்படையில், அந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யவேண்டிய தேவை எதுவும் இல்லை என்று கருதுகிறோம்’ என்றனா்.

எனினும் அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவா்களுடன் உடன்படவில்லை. ஆதாா் மசோதா பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது குறித்து விசாரித்து வரும் அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு, அதுதொடா்பாக முடிவு எடுக்கும்வரை மறுஆய்வு மனுக்களை நிலுவையில் வைக்கவேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

இறுதியில் பெரும்பான்மை நீதிபதிகள் முடிவின்படி, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT