இந்தியா

கோவா பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: முதல்வர் பிரமோத் சாவந்த்

DIN

பனாஜி: கோவா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உடல் நலக்குறைவால் பாரிக்கர் காலமானார். இதையடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றார்.
 கோவா சட்டப் பேரவையின் பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் நிலையில், பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய பிரமோத் சாவந்த், கோவா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான தேவை எதுவும் இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவாவில் நடைபெற்று வரும் சில மேம்பாட்டுத் திட்டங்கள் அடுத்த ஓரிரு நாள்களில் நிறைவடைய உள்ளன.
எனது தலைமையில் ஆட்சி சிறப்பாகவும் நிலையாகவும் செயல்பட்டு வருகிறது. எங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துவிட்டு சரியான நேரத்தில் தேர்தலை அணுகுவோம். கோவாவில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்றார்.
கோவா சட்டப் பேரவையில் 27 உறுப்பினர்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸýக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர். இதைத் தவிர சுயேச்சைகள் 3, கோவா முன்னேற்றக் கட்சிக்கு 3, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT