இந்தியா

தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள்: கேஜரிவால்

DIN


தில்லியில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தில்லியின் 50 சதவிகித மக்கள் தொகைக்கு சமமாகும். 

பரிசோதனைகளை அதிகரித்து சிகிச்சை அளிக்கும் முறையை துரிதப்படுத்தியதால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

தில்லியில் நேற்றைய (ஜன.20) நிலவரப்படி 228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,33,049-ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 6,20,128 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் 63,161 பேருக்கு கரோனா பரிசோதனை செய்த நிலையில், இதுவரை மொத்தமாக 1,00,59,193 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT