இந்தியா

தில்லி புறவழிச் சாலையில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு: விவசாய சங்கங்கள்

DIN

தில்லி புறவழிச் சாலையில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.

குடியரசு நாளன்று டிராக்டர் பேரணி நடத்துவது தொடர்பாக தில்லி காவல்துறையினருடன் விவசாயிகள் இன்று (ஜன.21) ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில் டிராக்டர் பேரணி குறித்தும், வழித்தடங்கள் குறித்தும் விவசாயிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பேசிய கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், குடியரசு நாளன்று தில்லி புறவழிச் சாலைகளில் டிராக்டர் பேரணியை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

எனினும் அந்த வழியில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். நாளை மத்திய அரசுடன் மீண்டும் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT