இந்தியா

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்: பிரதமர் தலைமையில் காணொலியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தினமணி

புது தில்லி: 2021}22 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு வரும் 30}ஆம் தேதி பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

டாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுப்பது வழக்கம். 17}வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் வரும் 29 } ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது. நிதி நிலை அறிக்கை பிப்.1}ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 30}ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். 

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிவார். அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு மசோதாக்கள், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகள் கேட்டறியப்படும் என்றார் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி. 

கேள்வி நேரம் உண்டு: கடந்த முறையைப் போன்று இந்த முறையும் காலையில் மாநிலங்களவைக் கூட்டமும், மாலையில் மக்களவையும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரைப்போன்று இல்லாமல் இம்முறை கேள்வி நேரம், தனிநபர் மசோதாக்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக... இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த நிதிநிலைக் கூட்டத்தில் வருகின்ற பிப்.15 } ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற முதல் கட்டத்தில் அரசின் முக்கிய மசோதாக்கள் இடம் பெறவாய்ப்பில்லை . 

மார்ச் 8}ஆம் தேதி முதல் ஏப். 8 }ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கூட்டத்தொடரில் அரசின் மசோதாக்கள் அதிக அளவில் கொண்டுவரப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT