இந்தியா

காஷ்மீரில் நீடிக்கிறது "கடுங்குளிர்'

DIN

ஸ்ரீநகர்: காஷ்மீரில் புதன்கிழமை ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக, பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் உறைபனி கொட்டியதால் வெப்பநிலை பல டிகிரி செல்சியஸýக்கும் கீழே சென்றதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். 
இதுகுறித்து அந்த அதிகாரி கூறியதாவது: ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை இரவு மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்த குளிர் புதன்கிழமை மைனஸ் 6 டிகிரி செல்சியஸாக பதிவானது. கடந்த ஆண்டு இதேநாளில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி
செல்சியஸாகக் காணப்பட்டது. 
 உறைபனி காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பல நீர்நிலைகள் உறைந்து காணப்பட்டன. கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகரிலும், அதையொட்டியுள்ள பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளிலும் பனிக்கட்டிகள் கொட்டி கிடந்ததால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள்  சிரமப்பட்டனர். நீண்ட நேரம் கழித்து, சூரிய ஒளி வந்த பிறகே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலைமை திரும்பியது.
காஷ்மீரில் பனியின் தாக்கம் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 
காஷ்மீர், தற்போது "சில்லய்}கலான்' என்னும் 40 நாள்கள் நீடிக்கும் ஒரு குளிர் அலையின் பிடியில் சிக்கியுள்ளது.  இதன் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும் உறைந்து காணப்படுகின்றன. டிசம்பர் 21}ஆம் தேதி தொடங்கிய இந்த சில்லய்}கலான் ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT