இந்தியா

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.1 கோடி வீடுகளுக்கு ஒப்புதல்

DIN

புது தில்லி:  மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 14 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பங்கேற்றன. இந்த வீடுகள், பயனாளிகளின் தலைமையிலும், கூட்டு முயற்சியில் சிக்கன விலை வீடுகளாகவும், குடிசைப் பகுதிகளில் மேம்பாடு வீடுகளாகவும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நிலப் பிரச்னைகள், நகரங்களுக்கு இடையேயான இடம் பெயர்வு, கட்டுமான திட்டத்தில் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக, வீட்டுத் திட்டங்களை மாற்றியமைக்கும் விருப்பங்களை மாநிலங்கள் தெரிவித்துள்ளன. 70 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானங்கள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன. 41 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முடிவடைந்துள்ளன.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியதாவது:
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான உத்திகளை மாநிலங்கள் வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றம் சீராக உள்ளது, அனைத்து வித அடிப்படை மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகளை நாம் முடிக்க வேண்டும்.

வீடுகளை முடித்து பயனாளிகளுக்குக் கொடுப்பதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலை வாடகை வீடுகள் திட்டத்தை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும். 

சென்னை (தமிழ்நாடு), அகர்தலா (திரிபுரா), ராஞ்சி (ஜார்க்கண்ட்), லக்னோ (உத்தரப்பிரதேசம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ராஜ்கோட் (குஜராத்) ஆகிய 6 நகரங்கஙளில், பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் 6 சிறு வீடுகள் திட்டத்தில் இருந்து தொழில்நுட்பங்களை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கற்றுக் கொள்ளலாம். அதே தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT