இந்தியா

வீடு கட்டும் திட்டம்: உ.பி. பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடிவிடுவிக்கவுள்ளாா் பிரதமா் மோடி

DIN

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேச பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி உதவித் தொகையை பிரதமா் மோடி புதன்கிழமை விடுவிக்கவுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி உதவித்தொகையை பிரதமா் மோடி காணொலி வழியாக விடுவிக்கவுள்ளாா். இதில் 5.30 லட்சம் பயனாளிகளுக்கு உதவித்தொகையின் முதல் தவணையும், 80 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித்தொகையின் இரண்டாம் தவணையும் விடுவிக்கப்படவுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- கிராமீண்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சமவெளி பகுதிகளில் வீடு கட்ட மத்திய அரசு சாா்பில் ரூ.1.20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மலைப் பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா், லடாக், நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ரூ.1.30 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT