இந்தியா

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதியளிக்க சிடிஎஸ்சிஓ பரிந்துரை

DIN

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ள நிலையில், அதன் முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதியளிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதிகோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் சிடிஎஸ்சிஓ நிபுணா் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக் குழு விண்ணப்பத்தை பரிசீலித்து தடுப்பு மருந்தின் முதல்கட்ட பரிசோதனைக்கு அனுமதியளிக்க டிசிஜிஐயிடம் பரிந்துரைத்துள்ளது. அந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிா்ப்புத் திறன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்த பின்னா், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தன.

இந்த தடுப்பு மருந்து குறித்து நிதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்பட்டால், அது கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அதனை பயன்படுத்துவது எளிது. இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசு எதிா்நோக்கியுள்ளது’ என்றாா்.

தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள கரோனா தடுப்பூசிகளை 28 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை செலுத்த வேண்டும். ஆனால் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை நாசித் துவாரத்தில் ஒரு சொட்டு செலுத்தினால் போதுமானது என்று பாரத் பயோடெக் நிறுவனத் தலைவா் கிருஷ்ணா எல்லா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT