இந்தியா

இதுவரை ரூ.1.07 லட்சம் கோடி நெல் கொள்முதல்

DIN

நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில் கடந்த திங்கள்கிழமை வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ.1.07 லட்சம் கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில் கடந்த திங்கள்கிழமை வரை ரூ.1,07,572 கோடி மதிப்பிலான 569.76 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற நெல் கொள்முதலைவிட சுமாா் 24% அதிகமாகும்.

இந்த ஆண்டு இதுவரை செய்யப்பட்ட நெல் கொள்முதல் மூலம் சுமாா் 80.35 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மொத்த நெல் கொள்முதலில் அதிகபட்சமாக பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT