இந்தியா

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை புதிதாகத் துவங்குக: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

DIN

விவசாயிகளின் நலன் கருதி இன்று நடைபெறும் 10 ஆவது கட்ட பேச்சுவார்த்தையை புதிதாகத் துவங்க வேண்டுமென மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தில்லியில் விவசாயிகளின் போராட்டம் 50 நாள்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று 10 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 

விவசாயிகளும் மத்திய அரசும் இன்று 10 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கடந்த காலத்தை ஒதுக்கிவைத்துவிட்டு புதிதாக ஒன்றைத் துவங்க மத்திய அரசு மறுக்கும்போது நாம் அவர்களிடம் எவ்வாறு நேர்மறையான பதிலை எதிர்பார்க்க முடியும்? 

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் புதிதாக ஒரு பேச்சுவார்தையைத் துவங்க வேண்டும். அரசு முன்வந்து விவசாயிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசு முன்னோக்கிச் செல்லும் வழி' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT