இந்தியா

திருமலையில் மிருத்யுஹரண மகா யாகம் நிறைவு

DIN

திருப்பதி: திருப்பதியில் நடந்து வந்த அகால மிருத்யுஹரண மகா யாகம் புதன்கிழமை காலை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதி கபில தீா்த்தம் அருவிக் கரையில் உள்ள கபிலேஸ்வரா் கோயில் வளாகத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் அகால மிருத்யுஹரண மகாயாகத்தை தேவஸ்தானம் தொடங்கியது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இறப்பு குறித்த அச்சம் நீங்கி வளமுடனும், நலமுடனும் வாழ வேண்டி இந்த யாகம் நடைபெற்றது.

தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கிருஷ்ண யஜுா் வேதப் பிரிவைச் சோ்ந்த 51 வேத பண்டிதா்கள் இந்த மகாயாகத்தை நடத்தினா். அவா்கள் நாள்தோறும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒரு லட்சம் முறை பாராயணம் செய்தனா். இந்த மந்திரத்தை பாராயணம் செய்வதால் மரணபயம் என்பது நீங்கும் என்பது நம்பிக்கை. இது பட்டபாஸ்கரா் இயற்றிய ‘ஸ்ரீருத்ரம்’ நூலில் ‘சாந்திகல்பம்’ என்ற அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அகால மிருத்யுஹரண மகாயாகம் புதன்கிழமை காலை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

SCROLL FOR NEXT