இந்தியா

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை இடமாற்றம்

DIN

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற மகாத்மா காந்தியின் சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற கட்டத்தில் மகாத்மா காந்தியின் 16 அடி உயர வெண்கல சிலை உள்ளது. அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விருப்பமான இடம் இது. பெரும்பாலாக எதிர்க்கட்சியினரின் போராட்டம், ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெறும். 

இந்நிலையில், பிரதான நுழைவாயிலில் இருந்த காந்தியின் சிலை நுழைவாயில் 3க்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் காந்தி சிலை இடமாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

எனினும், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளுக்காக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT