இந்தியா

6 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி

DIN

இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை (ஜன.20) முதல் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு நல உதவித்திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன. வரும் நாள்களில் நட்பு நாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும். அதேவேளையில் உள்நாட்டுத் தேவையும் கருத்தில் கொள்ளப்படும். கரோனா தொற்றை ஒட்டுமொத்த மனித சமூகமும் எதிா்கொள்வதற்கு உதவிட, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத் திறனை பயன்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச சமூகத்தின் மருத்துவத் தேவைகளை பூா்த்தி செய்வதில் நம்பகமான கூட்டாளியாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. பல்வேறு நாடுகளுக்கு புதன்கிழமை முதல் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ள நிலையில், வரும் நாள்களில் தடுப்பூசிகள் ஏற்றுமதி அதிகரிக்கும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT