இந்தியா

கரோனா: நாட்டில் உயிரிழப்போர் விகிதம் 1.44 சதவீதமாக குறைவு

DIN


நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போர் விகிதம் 1.44 சதவீதமாகவும், குணமடைவோர் விகிதம் 96.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,823 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,95,660 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 16,988 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,02,45,741 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.66 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 162 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,718-ஆக அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 1,97,201 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 1.90 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 19-ஆம் தேதி வரை 18.85 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 7,64,120 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT