இந்தியா

விவசாயிகள் அமைதி காக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

DIN

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மற்றும் விவசாய குழுக்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்தது.

இதனிடையே இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், மனுதாரர் மற்றும் விவசாயிகள் கூறிய கருத்தைக் கேட்டனர்.

பின்னர் பேசிய நீதிபதிகள், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவாசாயிகள் அமைதி காக்க வேண்டும். வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டம் அமலுக்கு வந்தால் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தெரிவித்தனர்.

நீதிமன்றம் அமைத்த குழு மீது உள்நோக்கம் தெரிவிக்கக் கூடாது. தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும், விசாரணையில் சட்டம் கூறுவதே பின்பற்றப்படும்.

விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விசாரணைக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT