இந்தியா

கோவாவிற்கு 2-ம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள்

DIN


கோவாவிற்கு இரண்டாம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

வரும் வெள்ளிக்கிழமை (ஜன.22) முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி முதல் முதற்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், கோவாவில் 2 தனியார் மையங்கள் உள்பட 7 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 18 ஆயிரம் கரோனா தடுப்பு மருந்துகள் மும்பையிலிருந்து விமானம் மூலம் கோவாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 23,500 கரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டது. அதில் 426 தடுப்பு மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

அடுத்த வாரம் முதல் வாரத்தில் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கோவா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT