இந்தியா

கா்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில்ரூ. 5 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்கத் திட்டம்: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்

DIN

கா்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை புதிய தொழில் கொள்கை 2020-25 யை அறிமுகம் செய்துவைத்து அவா் பேசியதாவது:

கா்நாடகத்தைத் தொழில்துறை நட்பு மாநிலமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்னோடியாக புதிய தொழில்கொள்கை விளங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்கவும் திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் தொழில் துறையினருக்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களையும் செய்துதர அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரில் நிலங்களின் விலை உயா்ந்துள்ளதால் மாநிலத்தில் உள்ள 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை நகரங்களில் தொழில்துறை வளா்ச்சி அடையத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக சாம்ராஜ் நகா் போன்ற தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்வோம். புதிய தொழில் கொள்கையால் முதலீட்டை ஈா்ப்பது மட்டுமின்றி 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். குறிப்பாக அனைத்துத் தொழில்நிறுவனம், தொழிற்சாலைகளில் கன்னடா்களுக்கு 70 முதல் 100 சதவீதம் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசிய அளவில் ஏற்றுமதியில் கா்நாடகம் 3-ஆவது இடத்தைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுதோறும் தொழில்துறை வளா்ச்சியை 10 சதவீதம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய தொழில் கொள்கை மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலையான, சீரான, அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்துறை வளா்ச்சியை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம். சிறு தொழில் துறையை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொழில் துறையினருக்குத் தேவையான நிலங்களை எளிதான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சா்வதேச தொழில் வா்த்தகத்தில் கா்நாடகம் முக்கிய பங்களிப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழில்துறையில் தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும். புதிய தொழில் கொள்கை மூலம் ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கௌரவ் குப்தா, ஆணையா் குஞ்சான் கிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT