இந்தியா

அயோத்தியில் மசூதி திட்டப் பணி: ஜன.26-இல் தொடக்கம்

DIN

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் வரும் ஜன.26-ஆம் தேதி முறைப்படி தொடங்கவுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்தது. அதேவேளையில் அயோத்தியின் மற்றொரு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கா் நிலம் நிலம் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தனிப்பூா் கிராமத்தில் சன்னி வக்ஃபு வாரியத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், இந்திய-இஸ்லாமிய கலாசார ஆய்வு மையம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரி புகைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த திட்டப் பணிகள் வரும் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மசூதி கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை (ஐஐசிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தனிப்பூா் மசூதி திட்டப் பணிகளை குடியரசு தின கொண்டாட்டங்களுடன் தொடங்க ஐஐசிஎஃப் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அயோத்தி மாவட்ட வாரியத்திடம் மசூதி கட்டுமான திட்டத்துக்கு அனுமதி பெற விண்ணப்பித்து, மண் பரிசோதனை பணிகளை தொடங்குவதன் மூலம் திட்டப் பணிகளை முறைப்படி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தனிப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 15,000 சதுர அடியில் மசூதி கட்டப்படும் என்றும், இந்த மசூதி பாபா் மசூதியின் அளவில் கட்டப்படும் என்றும் ஐஐசிஎஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT