இந்தியா

ஜார்க்கண்டில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை

ANI

பறவைக் காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகின்ற நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் நான்சி சஹாய் திங்களன்று கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

ஜனவரி 17ஆம் தேதி வரை 4,014 பறவைகளின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை பறவைகள் மத்தியில் எந்த இறப்பும் ஏற்படவில்லை. 

இதனால், கோழி தயாரிப்புப் பொருள்கள் மீது எந்தவிதத் தடையும் விதிக்கப் போவதில்லை என்று சஹாய் கூறினார். ஜனவரி 12ம் தேதி வரை மாநிலத்தில் பறவைகளின் இறப்பு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் நிலைமையைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT