இந்தியா

நாட்டில் புதிதாக 13,788 பேருக்கு கரோனா; 14,457 பேர் குணம்

ANI

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 14,457 பேர் குணமடைந்துள்ளனர். 145 பேர் பலியாகினர்.

இந்தியாவில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 2.08 இலட்சமாக (2,08,012) உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து 20,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,71,773 பேர் ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 14,457 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 1,52,419 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,02,11,342 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தைக் கடந்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT