இந்தியா

கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னை: கேரள எம்எல்ஏ காலமானார்

18th Jan 2021 09:43 PM

ADVERTISEMENT


கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே விஜயதாஸ் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக திங்கள்கிழமை காலமானார்.

பாலக்காடு மாவட்டம் கொங்கட் தொகுதி எம்எல்ஏ கே விஜயதாஸ் (61). இவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 11-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த் தொற்றிலிருந்து அவர் குணமடைந்தபோதிலும், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் திரிச்சூர் மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை அவர் காலமானார்.

2011 மற்றும் 2016 பேரவைத் தேர்தல்களில் கொங்கட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT