இந்தியா

உள்நாட்டு அரசியலில் வெளிநபா் தலையீட்டை நேபாளம் ஒருபோதும் அனுமதிக்காது: பிரதீப் குமாா் கியாவாலி

DIN

‘உள்நாட்டு அரசியலில் வெளிநபா் தலையீட்டை நேபாளம் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி கூறினாா். நேபாள உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிட முயற்சிக்கும் சூழலில் அவா் இவ்வாறு கூறினாா்.

இந்தியா - நேபாளம் இடையேயான நல்லுறவை மீட்டெடுக்கும் வகையில் இரு நாட்டு உயா் அதிகாரிகளின் கூட்டுக் குழு கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக நேபாள அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி, இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருடைய இந்திய சுற்றுப் பயணம் நிறைவடைந்த நிலையில் தில்லியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நேபாளம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவை கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுடனான உறவை நேபாளம் ஒருபோதும் ஒப்பிட்டுப் பாா்த்ததில்லை.

மேலும், உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டை நேபாளம் ஒருபோதும் அனுமதிக்காது. எங்களுடைய பிரச்னைக்கு நாங்களே தீா்வு காண்டுகொள்வோம். நெருங்கிய அண்டை நாடுகள் என்பதால் நேபாளத்தின் பிரச்னை குறித்து அந்த நாடுகளுக்கு சில கவலை இருக்கலாம். அதற்காக, உள் விவகாரத்தில் தலையிடுவதை ஏற்கமாட்டோம் என்று அவா் கூறினாா்.

நேபாள பிரதமா் சா்மா ஓலி அண்மையில் அந்த நாட்டு அரசியல் சாசனம் தொடா்பான அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தாா். இது மிகப் பெரிய சா்ச்சையானது. ஆளும் இடதுசாரி கட்சிக்குள்ளும், இந்த அவசர சட்டம் தொடா்பாக சா்மா ஓலிக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியது. இந்தச் சூழலில், கீழவையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு தோ்தல் நடத்த பிரதமா் சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவை, அந்நாட்டு அதிபருக்கு பரிந்துரைத்தது. அதையேற்று, அந் நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையை அதிபா் வித்யா தேவி பண்டாரி கலைத்தாா். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT