இந்தியா

இந்திய ராணுவத்தின் செயல்பாட்டால் நாட்டின் நன்மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்

DIN

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல்போக்கு நிலவிய போது இந்திய ராணுவம் செயல்பட்ட விதம் நாட்டின் நன்மதிப்பை அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் 40 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் ரூ.425 கோடி செலவில் புதிய ராணுவ மருத்துவமனை கட்டப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்ன் பொன்விழா ஆண்டையொட்டி ஒட்டுமொத்த தேசத்துக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் போரில் இந்தியப் படைகள் வெளிபடுத்திய தீரம் தேசத்துக்கு அளவற்ற பெருமையை அளித்தது.

சமீபத்தில் கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்போக்கு நிலவிய போது இந்திய ராணுவம் செயல்பட்ட விதம் நாட்டின் நன்மதிப்பை அதிகரித்து, குடிமக்களை தலைநிமிரச் செய்துள்ளது.

மேலும் 4 தடுப்பூசிகள்: தற்போது 2 கரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 4 தடுப்பூசிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். ஏனெனில் இந்தியா தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நாடு அல்ல. ஒட்டுமொத்த உலகம் மீதும் அக்கறை கொண்டுள்ள நாடு என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT