இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்தில் 6 பேர் பலி: 17 பேர் காயம்

17th Jan 2021 09:05 AM

ADVERTISEMENT


ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 

இதுதொடர்பாக ஜலோர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சாகன் லால் கோயல் தெரிவித்ததாவது: 

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டம், மகேஷ்பூரில் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

தீ காயங்களுடன் மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

பேருந்தில் இருந்த மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கோயல் கூறினார்.

விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT