பாரத ரத்னா எம்.ஜி.ஆர். மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நேரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும், படத்திற்கும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர்,
திரையுலகிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். பரவலாக மதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ADVERTISEMENT
அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.