இந்தியா

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,144 பேருக்கு தொற்று; 181 பேர் பலி

17th Jan 2021 09:58 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 17,170 போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,57,985-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 17,170 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,96,885  -ஆக அதிகரித்தது. 

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு மேலும்181 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,274-ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் 2,08,826 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT