இந்தியா

சென்னை-கேவதியா இடையே சிறப்பு ரயில்: பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

DIN

சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடா்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து கேவதியாக்கு புறப்படும் இந்த ரயிலை பிரமதா் நரேந்திரமோடி தில்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஜனவரி 17-ஆம் தேதி காலை 11.12 மணிக்கு கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் பியூஷ்கோயல் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

சென்னை-கேவதியா: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11.12 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில்(09119) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.52 மணிக்கு கேவதியாவை அடையும்.

வழக்கமான சேவை: கேவதியாவில் இருந்து புதன்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(09120) புறப்பட்டு, சென்னை சென்ட்ரலை வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 20-ஆம்தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (09119) புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு கேவதியாவை அடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 24-ஆம் தேதி தொடங்குகிறது.

முழுவதும் முன்பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT