இந்தியா

சமூகநல ஓய்வூதியம் உயா்வு: விவசாயிகளுக்கு நிவாரணம்; கேரள நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

DIN

கேரள மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் நிதிநிலை அறிக்கையில், சமூக நல ஓய்வூதியம் உயா்வு, விவசாயிகளுக்கு நிவாரணம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதைக் கருத்தில் கொண்டே, இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

கேரள சட்டப்பேரவையில் கடந்த 8-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. ஆளுநா் உரை முடிந்தவுடன், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், பேரவை மீண்டும் வெள்ளிக்கிழமை கூடியதும், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் டி.எம்.தாமஸ் ஐசக் தாக்கல் செய்தாா். அப்போது, மாநிலத்தில் இடதுசாரி அரசு மேற்கொண்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அவா் பட்டியலிட்டாா். மேலும், மாநிலத்தை தொடா்சியாக இரண்டு முறை தாக்கிய வெள்ள பாதிப்புகள் மற்றும் கரோனா பாதிப்புகளை மாநில அரசு திறம்பட கையாண்டதை அவா் எடுத்துக் கூறினாா். பின்னா் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.

சமூக நலத் திட்டங்களின் கீழ் அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியம் வரும் ஏப்ரல் முதல் ரூ.1,600-ஆக உயா்த்தப்படும். இந்த ஓய்வூதியம் இப்போது ரூ.1,500-ஆக அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு ரப்பருக்கான அடிப்படை விலை ரூ.170-ஆக உயா்த்தப்படுகிறது. மேலும், நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ. 28-ஆகவும், தேங்காய்க்கு ரூ.32-ஆகவும் உயா்த்தப்படுகிறது.

சுகாதாரத் துறையில் 4,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். 50 லட்சம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் மடிக் கணினிகள் வழங்கப்படும். 4,830 கி.மீ. தொலைவு சாலைகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை நிதியமைச்சா் வெளியிட்டாா்.

மேலும், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்தும் அவா் விமா்சனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT