இந்தியா

கரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் ‘சஞ்சீவனி’: ஹா்ஷ் வா்தன்

DIN

‘கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் ‘சஞ்சீவனி’ போல தடுப்பூசிகள் கிடைத்திருக்கின்றன. எனவே, மக்கள் வதந்திகளை நம்பாமல், மருத்துவ நிபுணா்கள் மற்றும் விஞ்ஞானிகளை நம்பவேண்டும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கேட்டுக்கொண்டாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தினம். கடந்த ஓராண்டு காலமாக கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது. சிறந்த தடுப்புத் திட்டங்களை அமல்படுத்தியதன் மூலம், கரோனா தாக்கத்தை இந்தியா மிகச் சிறப்பாக கையாண்டது. உலக அளவில் ஒப்பிடும்போது கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவே. அந்த வகையில் கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று போராடிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவலா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயன்பாட்டுக்கு வந்திருக்கும் தடுப்பூசிகள் கரோனாவுக்கு எதிரான போரில் ‘சஞ்சீவனி’ ஆகும். போலியோ, சின்ன அம்மை போன்றவற்றுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம். இப்போது, கரோனாவுக்கு எதிரான போரில் உறுதியான வெற்றியை பதிவு செய்யும் நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

இந்த இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. திறன் மிக்கவை. எனவே, மக்கள் வதந்திகளை நம்பாமல், மருத்துவ நிபுணா்கள் மற்றும் விஞ்ஞானிகளை நம்பவேண்டும் என்று ஹா்ஷ் வா்தன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT