இந்தியா

தடுப்பூசியால் கரோனாவுக்கு எதிரான போரில் விரைவில் வெற்றி: ஹர்ஷ வர்தன்

16th Jan 2021 07:18 PM

ADVERTISEMENT


கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், கரோனாவுக்கு எதிரான போரில் விரைவில் வெற்றி பெறுவது உறுதி என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியது:
 
"கரோனாவுக்கு எதிரான போரில் ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளோம். கடந்த 3, 4 மாதங்களின் குணமடைவோர் மற்றும் இறப்பு விகிதங்களின் தரவுகள் நாம் கரோனாவுக்கு எதிரான வெற்றியை நோக்கி நகருவதையே உணர்த்துகிறது. 

இதை துரிதப்படுத்துவதற்காக நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பரிசோதனைக்கு முன்வந்த தன்னார்வலர்கள் ஆகியோரது உதவியுடன் நமது விஞ்ஞானிகள் 2 உள்நாட்டு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர்.

ADVERTISEMENT

கரோனாவுக்கு எதிரான போரில் தற்போது தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்தப் போரில் வெற்றியை நோக்கி நகர்ந்து வந்தோம். தற்போது வெற்றியை விரைவில் அடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தடுப்பூசி குறித்தும், தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்தும் சிலர் வதந்திகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால், இன்று நிறைய பேர் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சிறந்த மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

சுகாதாரத் துறை அமைச்சர்களோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்கிற விவாதம் எழுந்துள்ளது. நான் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று என்னிடம் கேள்வியெழுப்பப்பட்டது. நான் எனது வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்போது நானும் செலுத்திக்கொள்வேன். மக்கள் பிரதிநிதிகள் முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், இந்தத் தலைவர்கள் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர் என்று இவர்கள் பேசுவார்கள். அதனால், அதுபோன்ற விவாதங்கள் குறித்து நாம் கவலைப்படக் கூடாது."

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT