இந்தியா

உ.பி.: பறவைக் காய்ச்சல் உறுதி

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

உத்தரப்பிரதேசத்தில் நிலவும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்திருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியாகியுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் புரன்பூர், பிலிபிட் ஆகிய  பகுதிகளில் இறந்த பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT