இந்தியா

இன்று மனித குலத்தின் சிறந்த நாள்: தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர்

16th Jan 2021 01:08 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ள இன்றைய நாள் மனித குலத்தின் மிகச்சிறந்த நாள் என்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 212 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் 1,800 முன்களப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே மேற்கு வங்கத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய அவர், ''இன்று மனித குலத்தின் மிகச் சிறந்த நாள். கரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவருவதை இன்றைய தினம் காட்டுகிறது.

கரோனாவால் ஏராளமான உயிர்களை பறிகொடுத்துள்ளோம். கடந்த ஓராண்டு காலமாக மன அழுத்தத்தில் இருந்தோம். ஆனால் இன்று முதல் மீண்டும் வாழ்க்கையை புதுப்பிப்போம்'' என்று கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT